முதல்முறையாக இயக்குநர் அட்லி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ! ஜவான்-ல் இணையும் பிரம்மாண்ட கூட்டணி..
ஷாருக் கானுடன் மோதும் VJS
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இயக்குநர்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுபவர் இயக்குநர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் ஜவான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து அவர் இயக்கவுள்ள இப்படத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.
ஏற்கனவே அப்படத்தின் அறிவிப்பு வீடியோ எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்காக இசையமைபாளர் அனிருத் இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராணா தான் அப்படத்தில் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அவர் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது ஷாருக் கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகியுள்ளார். ரஜினி, கமல், விஜய்யை தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கும் வில்லனாகியிருக்கிறார் விஜய் சேதுபதி.