யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் அவுட்! குக் வித் கோமாளியில் உறுதியான டாப் 5 லிஸ்ட் இதோ
குக் வித் கோமாளி 3ம் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் கடைசி எலிமிநேஷன் நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் கெஸ்ட்டாக ஆர்ஜே பாலாஜி வந்திருக்கிறார். அவரது முன்னிலையில் இன்று போட்டி நடந்தது.
முதல் சுற்றில் சிறப்பாக சமைத்த தர்ஷன் செஃப் ஆப் த வீக் வாங்கினார் . அதனை தொடர்ந்து அம்மு அபிராமி மற்றும் வித்யூலேகா அகியோரும் பைனலுக்கு முன்னேறுவதாக அறிவிக்கப்பட்டது.
மீதம் இருக்கும் ரோஷ்ணி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இடையே தான் எலிமினேஷன் சுற்று போட்டி நடந்தது. அதில் பாகற்காயை வைத்து இருவரும் சமைத்தனர்.
இறுதியில் ரோஷ்ணி சமைத்ததில் குறை கண்டுபிடித்து அவரை எலிமினேட் செய்துவிட்டனர். அவர் எலிமினேட் ஆவார் என ஷோவில் இருக்கும் மற்றவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
தனது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர இந்த ஷோ உதவியது என அவர் உருக்கமாக பேசிவிட்டு வெளியில் கிளம்பினார்.
மீண்டும் நடிப்பாரா காஜல்? பிரசவத்திற்கு பின் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரா