ஜப்பானில் 200 நாட்களை கடந்த RRR!. பிரமிக்கவைக்கும் வசூல் சாதனை
ஆர் ஆர் ஆர்
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர்.
இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் இப்படம் உலகளவில் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.மேலும் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று அசத்தியது.

பிரமிக்கவைக்கும் வசூல்
இந்நிலையில் ஜப்பானில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்திற்கு அந்த நாட்டு மக்களும் நல்ல ஆதரவு கொடுத்துள்ளனர். அங்கு இப்படம் 200 நாட்களுக்கு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியுள்ளது.
தற்போது ஆர் ஆர் ஆர் ஜப்பானில் மட்டும் ரூபாய் 119 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சும் புஷ்பா 2? இப்படி ஒரு பிரமாண்டமா!
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    