ரஜினிகாந்த படத்தை ஓவர்டேக் செய்த ராஜமௌலி! முக்கிய இடத்தில் RRR சாதனை
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து 1995 -ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் தமிழ் நாட்டில் மாஸ் ஹிட் ஆனது. இப்படம் ஜப்பான் நாட்டிலும் திரையிடப்பட்டது.
இந்த படத்திற்காக ஜப்பான் நாட்டு மக்கள் கொடுத்த நல்ல வரவேற்பால் படம் 22 கோடி வசூலானது. இதன் மூலம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என சாதனை படைத்தது.

முறியடித்த ராஜமௌலி
சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான "ஆர்.ஆர்.ஆர்" படத்தை ஜப்பான் மொழியில் டப் செய்து கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி 49 நகரங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில் முத்து படத்தின் சாதனையை எந்த படமும் ஜப்பானில் முறியடிக்காத நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 53 நாட்களில் 24 கோடி வசூல் செய்து முறியடித்துள்ளது. இது தற்போது தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார்: உதயநிதியை தாக்கிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு