RRR படம் தமிழகத்தில் 3 நாளில் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா?- தெறி கலெக்ஷன்
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜமௌலி இப்போது பாகுபலி, RRR படங்கள் மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார்.
என்ன தான் இவரது இயக்கம் என்றாலும் கதை அவரது அப்பா விஜயயேந்திர பிரசாத் எழுதியது, அவரது பங்கும் இதில் அதிகம் உள்ளது.
பட ரிலீஸ்
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரிலீஸ் முன்பே சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் மூலம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
3 நாள் வசூல் விவரம்
படத்திற்கு விமர்சனங்கள் அமோகமாக இருக்க நாளுக்கு நாள் வசூலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. 3 நாள் முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 32 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 480 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆஸ்கர் விருது மேடையில் பிரபல நடிகரை திடீரென கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்- பரபரப்பான வீடியோ