சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை விட அதிகம் வசூலித்த RRR படம்- தமிழ்நாட்டில் மொத்த கலெக்ஷன்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் RRR. இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட ஒருவழியாக அண்மையில் தான் ரிலீஸ் ஆனது.
ரிலீஸிற்கு பின் நடந்த விஷயங்கள்
படத்தில் முக்கிய நடிகர்களாக நடித்த ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் நடிப்பு அதிகம் ரசிகர்களால் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. மக்களின் ஆதரவால் சந்தோஷம் அடைந்த ஜுனியர் என்.டி.ஆர் கூட தனது நன்றியை தெரிவித்து ஓரு அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் இன்னொரு பக்கம் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற கோபத்தில் நடிகை ஆலியா பட் இயக்குனர் ராஜமௌலியை சமூக வலைதளங்களில் அன் பாலோ செய்துள்ளார், இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.
வசூல் விவரம்
தெலுங்கு சினிமா நடிகர்களால் உருவாக்கப்பட்டாலும் தமிழ் மக்களால் அதிகம் வரவேற்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளது, வரும் நாட்களிலும் வசூல் அதிகமாகும் என்கின்றனர்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த தமிழ்நாட்டு வசூலையும் முறியடித்து வெற்றிநடைபோடுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் குழந்தைக்கு இப்படி ஒரு சோகமா?- வருத்தப்படும் ரசிகர்கள்

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
