முக்கிய இடத்தில் படுதோல்வியை நோக்கி RRR படம்.. பல கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகுமா
RRR
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் RRR.
பிரபம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவந்த இப்படம், வெளிவந்த 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில், தென்னிந்தியாவில் முக்கிய இடங்களில் ஒன்றான கேரளாவில் வெளிவந்த இப்படம் தற்போது வரை ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதில் ஷேர் மட்டுமே ரூ. 5 கோடி கிடைத்துள்ளது.

கேரளாவில் தோல்வி
மேலும், இன்று மற்றும் நாளை இரு நாட்களும் கேரளாவில் Strike என்பதினால், எந்த ஒரு படமும் திரையரங்கில் ஓடாது.
இதனால், பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 ரிலீசுக்கு முன் மிஞ்சியிருக்கும் சில நாட்களில் இன்னும் ரூ. 7 கோடி ஷேர் எடுத்தால் மட்டுமே கேரளாவில் RRR திரைப்படம் வெற்றிபெறமுடியும்.
இதன்முலம், கேரளாவில் RRR படம் தோல்வியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்று திரை வட்டாரத்தில் பேசத்துவங்கிவிட்டனர்.
https://cineulagam.com/article/yash-about-kgf2-clashing-with-beast-1648432889?itm_source=parsely-top