திடீரென துப்பாக்கியுடன் RRR படம் பார்க்க வந்த ரசிகர்- காவல்துறை செய்த அதிரடி காரியம்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய RRR படம் குறித்த பேச்சு தான் இப்போது மக்களிடம் அதிகம் உள்ளது. நேற்று தான் படம் ரிலீஸ், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
பட ரிலீஸ் கொண்டாட்டம்
கிட்டத்தட்ட 2, 3 வருடங்களுக்கு மேல் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். படம் தயாராகவே நேரம் ஆனது பின் கொரோனா காரணமாக பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
படமும் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளது.

துப்பாக்கியுடன் வந்த ரசிகர்
ஆந்திராவில் கோதாவரி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர் ஒருவர் RRR திரைப்படத்தை காண துப்பாக்கியுடன் வந்துள்ளார். அதனை கண்டதும் அனைவரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். பின் போலீசார் அந்த ரசிகரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரனை நடத்தினர்.
