எந்த ஒரு இந்திய திரைப்படங்களுக்கும் கிடைத்திராத அங்கீகாரம்! ராஜமௌலியின் RRR படைத்த சாதனை..

By Jeeva Jul 19, 2022 10:30 AM GMT
Report

சாதனை படைத்த RRR

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் NTR நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் RRR.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்டமாக உருவானது RRR, பெரிய எதிர்பார்பிற்கு இடையே இப்படம் இந்தியளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் உலகளவில் ரூ.1150 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. அந்தளவிற்கு இப்படத்திற்கு பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது.

எந்த ஒரு இந்திய திரைப்படங்களுக்கும் கிடைத்திராத அங்கீகாரம்! ராஜமௌலியின் RRR படைத்த சாதனை.. | Rrr Movie Video Record On Twitter

இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் Netflix-ல் வெளியானது, அப்போதில் இருந்து இப்படம் உலகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

அப்படி இப்படத்தை கண்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் RRR திரைப்படம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் Nate Offord என்பவர் RRR படத்தின் முக்கிய காட்சியை பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோ 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது, மேலும் இதை முதல் இந்திய வீடியோ இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேடையில் அனைவரும் முன் தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட உலகநாயகன் கமல் !

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US