RRR திரைப்படம் உலகம் முழுவதும தெறிக்கும் வசூல்- செம கலெக்ஷன்
RRR இந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வரும் ஒரு திரைப்படம்.
ராஜமௌலி இயக்கிய இப்படம் வெற்றிகரமாக முதல் வாரத்தை தாண்டிவிட்டது, ஆனால் படத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்துகிறது.
படத்தின் வசூல் விவரம்
படம் வெளியான 7வது நாளிலும் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 30 கோடி வரை வசூலித்திருக்கிறது. தற்போது முதல் வார முடிவில் ரூ. 710 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
படத்திற்கு மக்களிடம் இன்னும் வரவேற்பு இருப்பதாலும் அடுத்து விஜய்யின் பீஸ்ட் படம் தான் அதற்குள் இப்படம் ரூ. 1000 கோடியையும் எட்டிவிடும் என்கின்றனர் சில சினிமா வட்டார பிரபலங்கள்.

ஆலியா பட் விளக்கம்
இப்படி படம் வசூல் வேட்டை நடத்திவந்தாலும் இன்னொரு பக்கம் படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் அவரது காட்சிகள் படத்தில் அவ்வளவாக இல்லை.
ஆனால் ஆலியா பட் இப்படம் எஸ்.எஸ். ராஜமௌலி பல வருட உழைப்பு, இதற்காக பலரும் நிறைய கஷ்டப்பட்டுள்ளார்கள். எனக்கு அவரது இயக்கத்தில் நடித்ததே சந்தோஷ விஷயம் என தெரிவித்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தலைகீழாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை- ஷாக்கான ரசிகர்கள்