கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தலைகீழாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை- ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமா சீரியல் பிரபலங்களில் அண்மையில் குழந்தை பெற்றது நடிகை ஆல்யா மானசா. அவருக்கு ஆண் குழந்தை பிறக்க அழகிய புகைப்படத்துடன் சஞ்சீவ் தகவலை வெளியிட்டார்.
கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை
இப்போது பாலிவுட் சினிமாவின் பிரபல சீரியல் நடிகை டெபினாவும் 12 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார். இவர் தமிழில் 2005ம் வருடம் மாயாவி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அதன்பிறகு அவர் நடித்த ராமாயன் தொடர் அவரின் புகழை பெரிய அளவில் ரீச் ஆக வைத்தது. அடுத்தடுத்து தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் அதிகம் பயணிக்க ஆரம்பித்து இப்போதே அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
டெபினாவின் திருமணம்
டெபினா ராமாயண் தொடரில் ராமனாக நடிக்க குர்மித் என்பவரையே காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது டெபினா முதன்முறையாக கர்ப்பமாகியுள்ளார். அந்த செய்தி கேட்டு பிரபலங்கள் ரசிகர்கள் என வாழ்த்து கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் நடிகை டெபினா கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் தலைகீழாக நின்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலனுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்