RRR படத்தின் முதல் Review ! 3000 கோடி வசூல் உறுதி..
RRR
இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வரும் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
RRR படத்தின் முதல் விமர்சனம்
இதற்கிடையே தற்போது இப்படத்தில் பணியாற்றியுள்ள ஒருவர் RRR படம் கண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன்படி "RRR படத்தின் காட்சியமைப்பு பிரமிக்க வைக்கிறது, ராஜமௌலி சாத்தியமற்றதை படமாகியுள்ளார். RRR படத்தின் 3D வெர்ஷனை பார்த்தேன், அழகாக காட்சியமைத்துள்ளார்கள். ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR ராம் மற்றும் பீம்-ஆகவே மாறியுள்ளனர்.
நான் உறுதியாக சொல்கிறேன், RRR படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும், யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை படைக்கும். 3000 கோடிக்கு மேல் வசூலிக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இந்த வார்த்தை என்னை எரிச்சலூட்டுகிறது - பான் இந்தியா படம் குறித்து துல்கர் சல்மான் சொன்ன விஷயம்..