ருத்ரன் படம் ரிலீஸுக்கு தடை! கடைசி நேரத்தில் நீதிமன்றம் போட்ட தடை
ருத்ரன்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது.
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படம் மூலமாக இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து இருக்கிறார்.
நீதிமன்றம் தடை
ருத்ரன் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரிலீஸுக்கு தடை விதித்து இருக்கிறது.
ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறது. 12.25 கோடி ரூபாய்க்கு விலை பேசி அதற்க்கு முன்பணமாக 10 கோடி ருபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது மேலும் 4.5 கோடி ருபாய் கொடுத்தால் தான் டப்பிங் ரைட்ஸ் கொடுக்க முடியும் என தயாரிப்பாளர் கூறியதால் அந்த நிறுவனம் நீதிமன்றம் சென்றது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஏப்ரல் 24ம் தேதி வரை ருத்ரன் படத்தை வெளியிட தடை விதித்து இருக்கிறது.
இந்த போட்டோவில் இருக்கும் 'சந்திரமுகி' நடிகை யார் தெரியுமா?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
