சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த லக்.. 1000 கோடி வசூல் இயக்குனருடன் கூட்டணி
ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த Sapta Sagaradaache Ello side A மற்றும் side B ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.
இவர் விஜய் சேதுபதியுடன் Ace எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
முன்னணி மாஸ் ஹீரோவிற்கு ஜோடி
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்திற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ரூ. 1000 கொடிக்கும்மேல் வசூல் செய்த கேஜிஎப் 2 திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் கமிட்டாகியுள்ளாராம்.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.