ரன் பேபி ரன் திரை விமர்சனம்
ஆர் ஜே பாலாஜி எப்போதும் தனக்கு என்ன வருமோ அதை தெரிந்து அதில் சிக்ஸர் அடிப்பவர். அப்படித்தான் தொடர்ந்து எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்லே விசேஷம் என கலக்கினார். முதன் முறையாக தன்னுடைய Safe Zone-ல் இருந்து வெளியே வந்து ஒரு படத்தை கொடுத்துள்ளார், இந்த ரன் பேபி ரன் எப்படியிருக்கு என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
ஆர் ஜே பாலாஜி வங்கியில் வேலை, நல்ல வீடு, கார் என சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென ஒரு நாள் அவருடைய காரில் ஐஸ்வர்யா ராஜேஸ் ஏறுகிறார்.
அவர் ஏதோ மிகப்பெரிய பிரச்சனையில் இருக்க, பாலாஜியும் வேண்டா வெறுப்பாக அவரை தன் வீட்டில் தங்க வைக்க, அடுத்த நாள் காலை ஐஸ்வர்யா ராஜேஸ் இறந்துகிடக்கிறார்.
அதன் பின் பாலாஜி என்ன செய்தார், ஐஸ்வர்யா ராஜேஸை யார் கொன்றார்கள், ஏன் இப்படி செய்தார்கள் என்பதன் மர்ம முடிச்சே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆர் ஜே பாலாஜி முதன் முதலாக எந்த ஒரு காமெடி காட்சியும் இல்லாமல், ஏன் படத்தில் சிரிக்க கூட இல்லை, அந்த அளவிற்கு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார், அவருடைய பதட்டம் படத்தின் முதல் பாதியில் நம்மையும் பதட்டத்துடனே கொண்டு செல்கிறது.
அதிலும் ஐஸ்வர்யா ராஜேஸ் உடலை பெட்டிக்குள் வைத்து அலையும் காட்சிகள் உச்சக்கட்ட பதட்டம், அதிலும் ஐஸ்வர்யா ராஜேஸ் கை வெளியே தொங்கும் காட்சி ஒரு நிமிடம் அச்சத்தில் உறைய வைக்கிறது.
படத்தின் முதல் பாதி நம்மை சீட்டின் நுனிக்கு அழைத்து செல்கிறது, அதற்கு பலமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் உள்ளது.
அத்தனை சஸ்பென்ஸும் முதல் பாதியில் இருக்க, இரன்டாம் பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்கிறது. ஆனாலும், முதன் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு தான்.
க்ளாப்ஸ்
படத்தின் முதற்பாதி
நடிகர், நடிகைகளின் நடிப்பு.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்களான இசை, ஒளிப்பதிவு போன்றவை.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கிருக்கலாம்.
மொத்தத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடி மட்டுமில்லை சீரியஸிலும் சிக்சர் தான்.
Rating: 3/5