என்னால் தான் விஜய் இப்படிப்பட்ட ஹீரோவானார்.. எஸ்.ஏ. சந்திரசேகரின் சர்ச்சை பேச்சு
எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.
இப்படத்தில் பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ்.ஏ.சி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய எஸ்.ஏ.சி தனது மகன் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதில் :
’என் மகன் விஜய்யை ஹீரோவாக்க வேண்டும் என்ற முயற்சியில் முதன் முதலில் நான் சென்ற இடம் பாரதிராஜா ஆபிஸ் தான். ஆனால், அவர் என் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை. நான் முதன் முதலில் துணை இயக்குனராக ஆகவேண்டும் என நினைந்து பாரதிராஜாவிடம் தான் சென்றேன். அப்போதும் எனக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை’.
’அதே போல் என் மகனை வைத்து படம் எடுக்கவில்லை. தொடக்கத்தில் எந்த ஒரு முன்னணி இயக்குனரும் என் மகனை வைத்து படம் எடுக்க முன் வரவில்லை. அதனால் நானே விஜய்யை வைத்து படம் எடுத்தேன். என்னால் தான் இன்று கமர்ஷியல் ஹீரோவாக விஜய் இருக்கிறார்’ என கூறினார் எஸ்.ஏ.சி.
தொடர்ந்து பேசிய அவர், ’கவுதம் மேனனிடமும் விஜய்யை வைத்து படம் எடுக்க கேட்டேன். ஆனால், அவரும் அதை செய்யவில்லை’ என கூறினார். இவருடைய இந்த பேச்சு பாரதிராஜாவையும், கவுதம் மேனனையும் தாக்கி பேசியதாக இருந்தது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் மனோபாலாவின் இறப்பிற்கு பிறகு அவரது மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்- என்ன தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
