கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! திருமணமாகி 20 வருடம் கழித்து அதிர்ச்சி
அர்ச்சனா
பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட நிலையில் அதில் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின் அவர் நடத்தி வரும் youtube சேனலில் மகளுடன் சேர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அதற்கு வரவேற்பு ஒரு பக்கம், ட்ரோல்கள் இன்னொரு பக்கம் என பல விதமான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
விவாகரத்து முடிவு
அர்ச்சனாவின் கணவர் வினீத் தற்போது இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினீத் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருந்ததாக அதிர்ச்சி தகவலை அவரே தற்போது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
"இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது, ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முடிவெடுத்துவிட்டோம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென விசாகபட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டுவிட்டார்கள்."
"என் மகள் ஸாரா எங்கள் இருவரிடமும் பேசினார். ஒருவரை விட்டு இன்னொருவர் வாழ முடியுமா என யோசித்துக்கொள்ளுங்கள் என கூறினாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதை போல தான் கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம்" என அர்ச்சனா கூறி இருக்கிறார்.
மணிமேகலை எதிர்காலத்திற்காக எடுத்த முடிவு.. CWC உண்மையை போட்டுடைத்த செஃப் தாமு
You May Like This Video

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
