கோவிலில் பூஜை செய்த எஸ்ஏசி! மீண்டும் விஜய் மிஸ்ஸிங்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பு தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அவர் தனது மனைவி உடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது.
விஜய் பெற்றோரை முதுமையில் இப்படி தவிக்க விட்டுவிட்டாரே என நெட்டிசன்கள் அதிகம் விமர்சித்தனர். இந்நிலையில் நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.
ஆனால் விஜய் இதற்கும் வரவில்லை. அவர் மகனுக்குரிய கடமைகளை கடமைகளை செய்யாமல் படங்களில்/பேட்டிகளில் மட்டுமே அப்பா சென்டிமென்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது விஜய்யை தாக்கி பேசி வருகின்றனர்.
விஜய்யின் கெரியரில் இந்த நிலையில் இருக்க முக்கிய காரணமான அப்பாவையே இப்படி விட்டுவிட்டாரே என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்ஏசி இடையே சமீப காலமாக பிரச்சனை இருக்கிறது என்றும், அவர்கள் பேசிக்கொள்வது இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் விருத்திக்காக தாய் தந்தைக்கு சிறப்பு பூஜை..! விஜய் இல்லை.. #Vijay #SAC #Shoba pic.twitter.com/aTP2pMajJz
— Polimer News (@polimernews) July 4, 2022
சிகிச்சைக்கு சென்ற டிஆர் இப்போது எப்படி இருக்கிறார்.. அமெரிக்காவில் இருந்து வந்த வீடியோ இதோ

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
