விஜய்யின் சச்சின் திரைப்படம் படு தோல்வியா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஆரம்பத்தில் காதலை முன்வைத்த படங்களில் நடித்து வந்தார்.
2005 -ம் ஆண்டு இவர் நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் சச்சின். இப்படம் தற்போது வரை பலரின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது.
வசூல்
இப்படம் வெளியான அதே தினத்தில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படம் வெளியானது. இதனால் விஜய்யின் சச்சின் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சச்சின் படத்தின் தயாரிப்பாளர் தானு, " சச்சின் படம் 200 நாட்கள் மேல் ஓடியது. சந்திரமுகி படத்துடன் இப்படம் வெளியானாலும் சச்சின் திரைப்படம் அதிகம் வசூல் செய்தது" என்று கூறியுள்ளார்.
16 வயதில் சமந்தா எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க.. அப்போவும் கிளாமர் தானா!

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
