முதல் படத்திற்காக மட்டுமே சாய் அபயங்கர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?... அடேங்கப்பா
சாய் அபயங்கர்
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே இளம் கலைஞர்களுக்கு வரவேற்பு கொடுக்க தவற மாட்டார்கள்.
அப்படி கட்சி சேரா, ஆச கூட போன்ற பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் சாய் அபயங்கர். இந்த 2 பாடல்களுமே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
கருப்பு, டியூட், எஸ்டிஆர் 49, பென்ஸ், சிவகார்த்திகேயன் படம் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
இன்னும் மாஸ் தகவல் என்னவென்றால் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகும் அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பளம்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி வரும் சாய் அபயங்கர் மலையாள சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இந்த படம் கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள 4 நண்பர்களின் கதையை சொல்கிறது. இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான்.
இந்த படத்திற்காக சாய் அபயங்கர் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.