நடிகை சாய் பல்லவியின் கார்கி படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம்
சாய் பல்லவி தென்னிந்திய சினிமா முன்னணி நடிகைகளின் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர். தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.
அதிலும் தெலுங்கில் டாப் நாயகியாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் கார்கி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த ஜுலை 15ம் தேதி மாஸாக வெளியாகி இருந்தது.
பட வசூல்
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, அது தொடர்பான வழக்கு, பின்புலத்தை மையமாகக் கொண்டு அழுத்தமான திரைக்கதையால் தாக்கம் தரும் படைப்பாக அமைந்துள்ளது சாய் பல்லவி நடித்துள்ள கார்கி.
படம் வெளியான நாள் முதல் விமர்சனங்கள் நன்றாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டுகிறது.
இதுவரை படம் தமிழகத்தில் மொத்தமாக ரூ. 3.5 கோடியும், சென்னையில் ரூ. 66 லட்சமும் வசூலித்துள்ளது.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
