சாய் பல்லவிக்கு பிரபல இயக்குனருடன் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா? உண்மை இதுதான்
சாய் பல்லவி ப்ரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர். முதல் படத்திலேயே எல்லோரையும் கவர்ந்து தற்போது முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக SK 21 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாக சைதன்யா ஜோடியாக ஒரு தெலுங்கு படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

திருமண வதந்தி
இந்நிலையில் சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் இருவரும் மாலையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கின்றனர்.
அந்த போட்டோ வைரல் ஆன நிலையில், உண்மையில் அது SK21 பட பூஜை ஸ்டில் என்பது தெரிய வந்திருக்கிறது. எப்படி எல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என ரசிகர்கள் கோபமாக X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
The picture that is circulating on social media platforms is from Saipallavi's new movie #SK21 POOJA OPENING CEREMONY PIC!#SaiPallavi @Sai_Pallavi92 pic.twitter.com/N8SWTiojCA
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 20, 2023