சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் ரிலீஸ் தேதி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
ராமாயணம்
ராக்கிங் ஸ்டார் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கின்றனர்.
நிதிஷ் திவாரி இயக்கும் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். அதை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் சன்னி தியோல், பாபிதியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
ரிலீஸ் தேதி
ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2 பாகங்களில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி அன்றும் இரண்டாம் பாகம் 2027 - ம் தீபாவளி அன்றும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
