வாரிசு நடிகரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி.. முதல் ஹிந்தி படம்
சாய் பல்லவி
எப்போதும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சாய் பல்லவி. கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக தண்டேல் எனும் படம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து ராமாயணா திரைப்படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். இதுதான் சாய் பல்லவியின் முதல் ஹிந்தி திரைப்படம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
முதல் ஹிந்தி படம்
ஆனால், இது அவருடைய முதல் திரைப்படம் இல்லை. இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகி வரும் Ek Din திரைப்படம்தான் சாய் பல்லவியின் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.
இப்படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானின் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.