ராமாயணா படத்திற்காக சைவ உணவிற்கு மாறினாரா சாய் பல்லவி.. உண்மை என்ன? இதோ பாருங்க
Sai pallavi Ramayana vegetarian controversy: ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கவே அவர் சைவ உணவிற்கு மாறியதாக சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ராமாயணா
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது.

இந்த நிலையில், ராமாயணா திரைப்படத்திற்காவே நடிகை சாய் பல்லவி சைவ உணவிற்கு மாறியதாக இணையத்தில் சில தகவல்கள் பரவி வந்தன. இதற்கு சாய் பல்லவி வெளிப்படையாக பேசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவம்
அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, தான் எப்போதும் தீவிர சைவ உணவு பழக்கத்தை உடையவர் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். இதில், "நான் ஒரு மாதம் ஜப்பானில் படப்பிடிப்பிற்காக சென்றபோது, அங்கு சுத்தமான சைவ உணவு கிடைக்கவே இல்லை. சைவ உணவுகள் என்று கூறப்பட்டவற்றில் கூட, கோழி இறைச்சி சூப்பில் கலந்திருந்தது. என் உடல் ஆரோக்கியத்திற்காக மற்றொரு விலங்கையோ அல்லது உயிரையே கொல்ல விரும்பாததால், உணவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என சாப்பிடாமல் பட்டினியாகவே இருந்தேன். நான் எங்கு சென்றாலும் சைவ உணவை மட்டுமே உண்பேன்" என கூறியிருந்தார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ராமாயணா படத்தில் கமிட் ஆன பின்னர்தான் சாய் பல்லவி சைவ உணவுக்கு மாறினார் என வதந்திகள் பரவி வரும் நிலையில், "எனது பட வெளியீடுகள் மற்றும் முக்கியமான தருணங்களில் உண்மைக்கு மாறாக பரப்பப்படும் இத்தகைய பொய் செய்திகளை இனியும் சும்மா விடமாட்டேன்; வதந்தி பரப்பும் நபர்கள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்து கடுமையாக எச்சரித்துள்ளார். இதன் மூலம் அவர் மீது பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இது சில ஆண்டுகளுக்கு மும்பே வெளியான தகவல் என்றாலும், தற்போது ராமாயணா ரிலீஸ் சமயத்தில் மீண்டும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.