தொடரும் சமந்தா உடனான திருமண வாழ்க்கை குறித்த கேள்விகள்! முற்றுப்புள்ளி வைத்த நாக சைதன்யா
சமந்தா - நாக சைதன்யா
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் நான்கு வருட திருமண வாழ்க்கை பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து இது குறித்து அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் இருந்த நிலையில் இருவரும் அவர்களின் வேலைகளில் பிஸியாகினர்.
இதற்கிடையே சமீபத்தில் நடிகை சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திருமண வாழ்க்கை குறித்து அதிகமாக பேசவில்லை என்றாலும், அந்த குழப்பான காலகட்டத்தில் இருந்து தான் வெளியே வந்து விட்டதாக கூறியிருந்தார்.
தொடரும் கேள்விகள்
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் அவரின் பட ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் சமந்தா குறித்து பேசுகையில் “நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம்.
இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமரசனத்தில் சிக்கி கொள்ள விரும்பவில்லை.
அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகபடியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என சமந்தா குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாக சைதன்யா.
தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan