தமிழ்நாட்டில் முதல் நாள் சலார் படத்தின் வசூல்.. இவ்வளவு தானா
சலார் முதல் பாகம்
பிரபாஸ் - பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் சலார் முதல் பாகம். இப்படத்தின் மீது அதிகளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினாலும், விமர்சன ரீதியாக இப்படம் பின்தங்கியுள்ளது.

பிரபாஸுக்கு இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு என்றும் ஆனால் இயக்குனர் பிரஷாந்த் நீல் தன்னுடைய இயக்கத்தில் சொதப்பிவிட்டார் என்றும் தான் கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், உலகளவில் ரூ. 165 முதல் ரூ. 175 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ள சலார் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

தெலுங்கில் ரூ. 65 கோடியும் வெளிநாடுகளில் மொத்தமாக முதல் நாள் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள சலார் தமிழ்நாட்டில் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu