தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்த சலார்.. ஆனால் உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா..
படுதோல்வியடைந்த சலார்
பல கோடி செலவு செய்து பிரமாண்டமாக ஒரு படத்தை எடுத்திருந்தாலும், அந்த படத்தில் கதை இல்லை என்றால் தமிழ் சினிமா ரசிகர்கள் அப்படத்தை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
இது பல முறை நடந்துள்ளது. அதே சம்பவம் தற்போது மீண்டும் ஒரு முன்னணி நட்சத்திரத்தின் படத்திற்கு நிகழ்ந்துள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் சலார்.
இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருந்தது. ஆனால், முதல் நாளே இப்படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தது.
இந்த படத்துக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தீங்க என கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு மோசமாக இருந்தது.
வசூல் விவரம்
இந்நிலையில், தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்துள்ள சலார் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 620 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே படுதோல்வியடைந்துள்ள சலார், தமிழகத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
