தமிழ்நாட்டில் டைனோசர் சலாரின் பருப்பு வேகவில்லை.. முன்னிலையில் அசோக் செல்வனின் சபா நாயகன்
சலார்
கடந்த 22ஆம் தேதி பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரபாஸின் சலார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அந்த படமே கெடுத்துக்கொண்டது.
ரிலீஸ் ஆவதற்கு முன் வேற லெவல், செம மாஸாக இருக்கும் பலரும் கூறிய நிலையில், அதற்கு பின் யாருமே வாய்யை திறக்கவில்லை. அப்படியொரு மோசமான நிலைக்கு சலார் தள்ளப்பட்டுள்ளது.
சலார் பருப்பு வேகவில்லை
உலகளவில் இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் சலார் பருப்பு கொஞ்சம் கூட வேகவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பல திரையரங்கங்களில் இருந்து சலார் படத்தை தூக்கிவிட்டனர்.
அதே நாளில் வெளிவந்த அசோக் செல்வன் படத்திற்கு கூடுதலாக அதிக திரையரங்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் அப்படம் ரசிகர்கள் மத்தியில் சாலர் படத்தை விட அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இதிலிருந்து தெளிவாக தெரியும் விஷயம் கதை நன்றாக இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும், கதை மட்டும் இல்லையென்றால் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்.