பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,050 கோடி கேட்கும் சல்மான் கான் !
சல்மான் கானின் சம்பளம்
இந்தியளவில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஹிந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
மேலும் கடந்த ஹிந்தி பிக்பாஸ் 15 சீசன்களை கடந்துள்ளது, அந்த 15 சீசன்களையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதற்கிடையே சல்மான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேற பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் பிக்பாஸ் குழு அவரை விடுவதாக இல்லை.
இதனிடையே கடந்த பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சிகாக நடிகர் சல்மான் வாங்கிய சம்பளம் ரூ.350 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 16-யை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் அதை விட மூன்று மடங்கு சம்பளத்தை கேட்டுள்ளார்.
அதன்படி தற்போது அவர் மூன்று மடங்கு சம்பளமாக ரூ.1050 கோடியை கேட்டுள்ளார் நடிகர் சல்மான் கான். இதைக்கேட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்காக இவ்வளவு சம்பளம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நிராகரித்த டாப் நட்சத்திரங்கள் ! இவர்கள் எல்லமா?

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
