முன்னாள் காதலிக்கு முத்தம் கொடுத்த சல்மான் கான்! பிறந்தநாள் பார்ட்டி வீடியோ வைரல்
சல்மான் கான் அவரது முன்னாள் காதலிக்கும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் 57 வயதான நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர் பல நடிகைகள் உடன் இதற்குமுன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அதை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.
முன்னாள் காதலிக்கு முத்தம்
சல்மான் கானுக்கு இன்று (டிசம்பர் 27) பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சல்மான் கான். அந்த பார்ட்டிக்கு நடிகை சங்கீதா பிஜ்லானியும் வந்திருந்தார்.
சல்மானின் முன்னாள் காதலியான அவர் பிரேக்அப்புக்கு பிறகும் சல்மான் உடன் நட்புடன் தான் இருந்து வருகிறார். அதனால் தான் அவர் பார்ட்டிக்கும் அழைக்கப்பட்டு இருந்தார்.
சங்கீதாவை பார்த்ததும் சல்மான் கான் அவர் கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காஜல் கணவருக்கு லிப்கிஸ்! பொது இடத்தில இப்படியா..