எனக்கு குழந்தை வேண்டும்.. உருக்கமாக பேசிய சல்மான் கான்

By Kathick May 03, 2023 05:30 AM GMT
Report

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் கிசி கா பாய், கிசி கி ஜான் எனும் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

எனக்கு குழந்தை வேண்டும்.. உருக்கமாக பேசிய சல்மான் கான் | Salman Khan Need To Be A Father

அடுத்ததாக சல்மான் கான் நடிப்பில் டைகர் 3 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

உருக்கமாக பேசிய சல்மான் கான் 

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் முறிவுகள் குறித்தும், தனக்கு தந்தையாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பது குறித்தும் பேசியுள்ளார்.

எனக்கு குழந்தை வேண்டும்.. உருக்கமாக பேசிய சல்மான் கான் | Salman Khan Need To Be A Father

அவர் கூறுகையில் : 'என்னுடைய முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். முதல் காதலி என்னை விட்டு பிரிந்து செல்லும் பொழுது நான் அவர் மீது கோபப்பட்டேன். அவர் மீது தான தவறு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அதன்பின் நான் காதலித்தவர்கள் என்னை விட்டு விலகியதும் தான் புரிந்துகொண்டு என்னிடம் தான் தவறு உள்ளது என்று.'

'எனக்கு தற்போது தந்தையாக வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் தந்தையாவதை நமது சட்டம் ஏற்றுக்கொள்ளாது' என கூறியுள்ளார். 

நடிகர் பாபி சிம்ஹாவின் மகள் மற்றும் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே?- அழகிய குடும்ப போட்டோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US