திருமணம் செய்யாமல் குழந்தை பெறும் நடிகர் சல்மான் கான்! 59 வயதில் எடுத்த முடிவு
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் டிவியிலும் அதிகம் சம்பாதிக்கும் நபராக இருந்து வருகிறார். அவர் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஷோ பெரிய அளவில் ஹிட் ஆகிறது.
59 வயதாகும் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வர இருக்கும் டூ மச் (Too Much) என்ற டாக் ஷோவில் சல்மான் கான் மற்றும் அமீர் கான் இருவரும் கெஸ்ட் ஆக கலந்துகொண்டு இருக்கின்றனர்.
அப்பா ஆவது பற்றி சல்மான்
நிகழ்ச்சியில் சல்மான் கான் தனது முந்தைய காதல் அனைத்தும் பிரேக்கப் ஆனதற்கு தன்னை தானே தான் குறைசொல்ல வேண்டும் என கூறி இருக்கிறார்.
"குழந்தைகள், நிச்சயமாக ஒரு நாள் நான் பெற்றுக்கொள்வேன். விரைவில். பார்க்கலாம்" என அவர் கூறியுள்ளார்.
"ஒரு பார்ட்னர் மற்றொருவரை விட அதிகம் வளரும்போது தான், இருவருக்கும் நடுவில் சில பிரச்சனைகள் வர தொடங்கி விடுகிறது. பாதுகாப்பின்மை தொடங்குகிறது. அதனால் இருவரும் ஒன்றாக வளர வேண்டும். அதை நான் நம்புகிறேன்" என சல்மான் கான் கூறினார்.