நாக சைத்தன்யா டேட்டிங் குறித்து மோசமாக கூறினாரா சமந்தா?- இதோ அவரது பதிவு
நடிகை சமந்தா
பிரபலங்களில் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்த ஜோடிகளில் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர்களாவர்.
ஆனால் இவர்களது காதல் திருமணம் நிறைய வருடங்கள் நீடிக்கவில்லை, சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இப்போது தான் மீண்டும் ஆக்டீவாக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

நாக சைத்தன்யா பற்றி சமந்தா
சகுந்தலம் படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செல்வது குறித்து கேட்டதால் நடிகை சமந்தா, யார் யாருடன் டேட்டிங் சென்றால் எனக்கு என்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும்.
அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது என சமந்தா இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.
ஆனால் தற்போது சமந்தா நான் இப்படி ஒன்றும் கூறவே இல்லை என தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023

சன் டிவியில் 90களில் இருந்த தொகுப்பாளர்களின் ரீ-யூனியன்- பெப்ஸி உமா, விஜய் சாரதி, ரத்னா லேட்டஸ்ட் க்ளிக்