காதலில் இருந்து விலகி இருப்பதே நல்லது - சமந்தாவின் அதிரடி பதில்..
டாப் நடிகையான சமந்தா
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவருக்கு தற்போது இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியது இல்லை.
மேலும் இவர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல், இப்படத்தில் சமந்தாவின் கதிஜா கதாபாத்திரம் தான் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சமந்தாவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சமந்தாவின் எதிர்பார்க்காத பதில்
இதனிடையே எல்லாருக்கும் நன்றி தெரிவித்து வந்த சமந்தா தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
அப்படி ரசிகர் ஒருவர் "ஒரே நேரத்தில் இவ்வளவு வெறுப்பையும் அன்பையும் பெறுவதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்" என கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தா "நான் அன்பையோ வெறுப்பையோ வாங்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்" என பதிலளித்துள்ளார்.
I try not to buy into the love or the hate .. stay a safe distance away from it all ♥️#AskSam https://t.co/RyLXiPjxca
— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
தொடர்ந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத KGF 2!