சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விஜய் டிவி தொகுப்பாளினியுடன் நடிகை சமந்தா எடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க
சமந்தா
தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யசோதா திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்களை சமந்தா கைவசம் வைத்துள்ளார்.
மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தா விரைவில் குணமடைந்து பழையபடி மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிக்க வருவதற்கு முன்
இந்நிலையில், நடிகை சமந்தா சினிமா படங்களில் நடிக்க வருவதற்கு முன் நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் சமந்தாவுடன் இணைந்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான ரம்யாவும் நடித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அப்போதிலிருந்தே நானும் சமந்தாவும் நல்ல நண்பர்கள் என்று ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
