பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமந்தா தெரிவித்த கருத்து! திடீரென வைரலாகும் வீடியோ

By Jeeva Sep 02, 2022 05:30 PM GMT
Report

சமந்தா

தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி தற்போது புஷ்பா திரைப்படத்தின் இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாகி இருக்கிறார் சமந்தா.

இவர் தற்போது யசோதாம், சாகுந்தலம் மற்றும் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமான குஷி படத்தில் விஜய் தேவாரகொண்டாவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா எப்போதும் சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர், இவரின் பதிவிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோஸ் இணையத்தில் வைரலாவதை பார்த்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமந்தா தெரிவித்த கருத்து! திடீரென வைரலாகும் வீடியோ | Samantha Comment On Modi

வைரல் வீடியோ

ஆனால் தற்போது சமந்தா பேட்டியளித்துள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஆம், அதில் சமந்தா “நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது”

மற்றொரு வீடியோவில் "மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார்” என பேசியுள்ள சமந்தா இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ ஏழு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது, அந்தச் சமயங்களில் நடிகை சமந்தாவும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை ஆதரித்து குப்பைகளை சுத்தம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.     

கரடு முரடான லாடக் பாதையில் மாஸ்ஸாக பைக் ஒட்டிய நடிகர் அஜித் குமார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US