சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிட்டாடல் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். மேலும் சில திரைபடங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கலங்கி அழுத சமந்தா
சமீபத்தில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று நடுவராக நடிகை சமந்தா கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் Gravity என்ற ஹிப் ஹாப் பாடகர் ஜலாலுதீன் எனும் பாடலை பாடினார்.
அந்த பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த பாடலை கேட்டு சமந்தா ஏன் அழுதார் என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் கொடிய நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு மோட்டிவேஷன் கொடுத்த பாடல் இதுதானாம்.
இதனால் தான் இந்த பாடலை கேட்டவுடன் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த வீடியோவை ஹிப் ஹாப் பாடகர் Gravity தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
