சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா?

By Karthick Raja Sep 30, 2026 09:50 AM GMT
Report
Rumours About Samantha gave birth to premature or twin babies: கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் பரவி வரும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தார். இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் உள்ளார்.

சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா? | Samantha Gave Birth To Premature Or Twin Babies

ஓடிடியில் சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜனநாயகன்

ஓடிடியில் சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜனநாயகன்

கர்ப்பகாலம்

கர்ப்பமாக இருக்கும் சமந்தாவால் படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார். மேலும், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் முடிவு எடுத்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ கூட சமீபத்தில் வெளிவந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா? | Samantha Gave Birth To Premature Or Twin Babies

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்

குறைப்பிரசவமா?

இந்த நிலையில், சமந்தாவிற்கு குறைப்பிரசவத்திலேயே, அதாவது 8 மாதத்திலேயே ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டதாகவும், அதை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்றும் தகவல்கள் உலா வந்தன. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா? | Samantha Gave Birth To Premature Or Twin Babies

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

உண்மை என்ன?

ஆனால், இது உண்மை இல்லை என உறுதியாக தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா அண்மையில் செய்த ஜிம் ஒர்க் அவுட் வீடியோவும், தனது கணவருடன் பிக்கில் பால் விளையாடிய வீடியோவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா? | Samantha Gave Birth To Premature Or Twin Babies

Frame-அ பாருங்க ஜி.. அனிருத் பாடலுக்கு பின் பல மடங்கு எரிய ஜெயிலர் 2 மீதான எதிர்பார்ப்பு..

Frame-அ பாருங்க ஜி.. அனிருத் பாடலுக்கு பின் பல மடங்கு எரிய ஜெயிலர் 2 மீதான எதிர்பார்ப்பு..

எப்போது பிரசவம்?

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு வருகிற டிசம்பர் மாதம் பிரசவ தேதியை மருத்துவர்கள் குறித்திருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதா? | Samantha Gave Birth To Premature Or Twin Babies

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US