வீட்டிற்கு வந்த சமந்தாவிற்கு கிடைத்த அழகான வரவேற்பு- யார் என்ன செய்துள்ளார்கள் பாருங்க
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் ஜோடிபோட்டு நடிக்காத முன்னணி நடிகர்களின் படங்களே இல்லை. சோலோவாக படங்கள் நடித்தும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்தார்.
குடும்ப வாழ்க்கை
சினிமாவில் வெற்றிப்பெற்றாலும் அவரது குடும்ப வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனையில் முடிந்துவிட்டது. அதாவது மக்கள் கொண்டாடிய நாக சைத்தன்யா-சமந்தா ஜோடி திருமணம் செய்துகொண்டு இப்போது பிரிந்துவிட்டார்கள்.
இது அவரது ரசிகர்களுக்கு சோகமாக தான் உள்ளது.
பாலிவுட்டில் படம்
தமிழ், தெலுங்கில் கலக்கிய சமந்தா இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். வருண் தவானுடன் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் சமந்தா, அப்படம் பற்றி பேசுவதற்காக சமந்தா மும்பை சென்றிருந்தார். தற்போது மீண்டும் அவர் ஹைதராபாத் வந்துள்ளார்.
பிஸியாக வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய சமந்தாவிற்கு அழகான வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் அவர் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்குட்டிகள். அந்த வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் புதிய சீரியல்- இவர்களா நடிக்கிறார்கள்