சிகிச்சை முடிந்து பழைய பொலிவுக்கு திரும்பிய சமந்தா.. போட்டோ பார்த்து ரசிகர்கள் ஹாப்பி
சமந்தா
சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த வருடமே அறிவித்தார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தான் அதிகம் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சமந்தா, தன்னால் எழ கூட முடியவில்லை என அப்போது கூறினார்.
சமந்தா இந்த auto immune நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று படிப்படியாக குணமடைந்து வருகிறார். அவர் தொடர்ந்து ஜிம்மில் தற்போது ஒர்கவுட் செய்து உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சியில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மகிழ்ச்சியான போட்டோ
தற்போது சமந்தா தான் நடித்து இருக்கும் சாகுந்தலம் படத்தினை குழுவினர் உடன் சேர்ந்து பார்த்து இருக்கிறார். அப்போது எடுத்த மகிழ்ச்சியான போட்டோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த அழகான படம் குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் நிச்சயம் கவரும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
சொந்தமாக கோவில் கட்டிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி! வீடியோவுடன் இதோ