இத்தனை கோடியை இழந்தாரா சமந்தா? சினிமாவில் பிரேக் எடுத்ததால் பெரிய நஷ்டம்
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரொயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நடித்து வந்த படங்கள் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டு தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஆன்மீக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
வேலூர் தங்க கோவில் தொடங்கி தற்போது கோவை ஈஷா யோகா மையத்திற்கு அவர் சென்று இருக்கிறார். அங்கு அவர் மெய்மறந்து தியானம் செய்யும் போட்டோவும் தற்போது வெளியாகி இருக்கிறது.

நஷ்டம்
சமந்தா தற்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டதால் அவருக்கு 12 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு படத்திற்கு 4 கோடி ரூ. வரை வாங்கும் சமந்தா, பிரேக் எடுப்பதால் தான் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் சமந்தா திருப்பி கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகை யார் தெரியுமா?