மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நடிகை சமந்தா- எங்கே தெரியுமா?
நடிகை சமந்தா
சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்ற துவங்கினார். பின் அதன்மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்தார்.
அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் டாப் நாயகியாக வலம் வந்தார்.
தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் கமிட்டான சமந்தா இப்போது கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
மேல் சிகிச்சை
மயோசிடிஸ் எனப்படும் தசைவீக்க நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மேல் சிகிச்சைக்காக தென் கொரியா பயணம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதேசமயம் அவர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமா முன்னணி நடிகர்களின் முழு சம்பள பட்டியல்- யார் டாப்பில் இருப்பது தெரியுமா?