நடிகை சமந்தா சேர்த்து வைத்துள்ள சொத்து.. எத்தனை கோடி மதிப்பு தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சமந்தாவின் உடல்நலம்
அண்மையில் இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கூட ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
அடுத்தடுத்த படங்கள்
சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டியுள்ளார். யசோதா படத்தை தொடர்ந்து குஷி, சகுந்தலம் ஆகிய படங்களை சமந்தா கைவசம் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
2010ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சமந்தா கடந்த 12 ஆண்டுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்து குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தா இதுவரை ரூ. 100 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் சமந்தா.
தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல்