உடலில் குத்தியிருந்த முன்னாள் கணவரின் பெயர் டாட்டூவை நீக்கிய சமந்தா.. வெளிவந்த புகைப்படத்தில் உறுதி செய்த ரசிகர்கள்
சமந்தாவின் டாட்டூ
முன்னணி நடிகை சமந்தா தனது உடலில் சில இடங்களில் தனக்கு பிடித்தபடி டாட்டூ குத்தியுள்ளார். முதுகில் YMC என குறிப்பிட்டு டாட்டூ ஒன்று குத்தியுள்ளார். இது அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'Ye Maaya Chesave' குறிப்பிடும் விதமாக குத்தியுள்ளார்.
இதே போல் தன்னுடைய விலா எலும்பு பகுதியில் Chay என டாட்டூ குத்தியுள்ளார். இது அவருடைய முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் மீது தான் வைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக குத்தி இருந்தார்.
சமந்தா - நாகசைதன்யா இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பின் சில காலம் இந்த டாட்டூவை தனது உடலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தார் சமந்தா.
டாட்டூவை நீக்கிய சமந்தா
ஆனால், தற்போது தன்னுடைய விலா எலும்பு பகுதியில் குத்தியிருந்த Chay எனும் டாட்டூவை நீக்கிவிட்டார். சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது.
விவாகரத்து ஆன பின்பும் நாகசைதன்யாவின் நினைவாக இந்த டாட்டூவை சமந்தா வைத்துள்ளார் என நெட்டிசன்களால் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அணைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Chay டாட்டூவை நீக்கியுள்ளார் சமந்தா. இதோ அந்த புகைப்படம்..