புஷ்பா 2 படத்தின் வாய்ப்பை நிராகரித்த சமந்தா.. இது தான் காரணமா?
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த கவர்ச்சி பாடலுக்கு சமந்தா நடனமாடியது மிகப்பெரிய ஹிட் ஆனது. ஊ சொல்றியா பாடல் அந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி நடனம்?
தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா, ஜிம்மில் ஒர்கவுட் செய்வதை வீடியோ எடுத்து அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி பாடலுக்கு மீண்டும் சமந்தா நடனம் ஆட படக்குழு அவரை அணுகியுள்ளனர். இதற்கு சமந்தா, ’வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை மறக்க நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் சிறந்த வழி. இனி கவர்ச்சி பாதைக்கு சென்றால் அதில் இருந்து மீண்டும் வர முடியாது’ என்று கூறி சமந்தா புஷ்பா 2 படத்தின் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹீரோ, டைரக்டர் லாம் அட்ஜஸ்ட் பண்ண சொல்லுவாங்க.. வரலட்சுமி சரத்குமார் அதிர்ச்சி புகார்