நடிகை சமந்தாவிற்கு வெற்றி கொடுக்குமா சாகுந்தலம், வெளிவந்த முதல் விமர்சனம்

By Kathick Mar 15, 2023 07:00 AM GMT
Report

நடிகை சமந்தா

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சாகுந்தலம். சரித்திர படமாக உருவாகும் இப்படத்தின் கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் தேவ் மோகன் என்பவர் நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அதிதி பாலன், கவுதமி என பல நட்சத்திரங்கழும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நடிகை சமந்தாவிற்கு வெற்றி கொடுக்குமா சாகுந்தலம், வெளிவந்த முதல் விமர்சனம் | Samantha Shares Her Review About Shakunthalam

இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், திடீரென மாற்றப்பட்டடு ஏப்ரல் 14ஆம் தேதி தான் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகும் என அறிவித்தனர்.

நடிகை சமந்தாவிற்கு வெற்றி கொடுக்குமா சாகுந்தலம், வெளிவந்த முதல் விமர்சனம் | Samantha Shares Her Review About Shakunthalam

இந்நிலையில், சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்ட சமந்தா அப்படம் குறித்து தன்னுடைய நெகிழ்ச்சியான விமர்சனத்தை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவு :

இறுதியாக நான் படத்தை பார்த்துவிட்டேன். இயக்குனர் குணசேகருக்கு நன்றி. இப்படியொரு அழகிய படத்தை எனக்கு கொடுத்ததற்கு. குடும்ப ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் எங்களுடைய மேஜிக்கல் உலகத்தை கண்டிப்பாக கண்டு ரசிப்பீர்கள். தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் நீலிமாவிற்கு நன்றி. சாகுந்தலம் திரைப்படம் என்றும் என்னுடைய மனதிற்கு நெருக்கமான ஒரு படம் என்று கூறியுள்ளார்.

சாகுந்தலம் படம் குறித்து சமந்தா வெளியிட்டுள்ள இந்த பதிவு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விக்ரம் ரோலெக்ஸ் போல் மாஸ் காட்ட முடிவெடுத்த கமல், அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US