அப்படி நடித்திருந்தால் கோடிக்கணக்கில் கொடுத்திருப்பார்கள்.. வெளிப்படையாக பேசிய சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை சமந்தா விளம்பர படங்களில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
வெளிப்படையாக பேசிய சமந்தா
இதில் "நான் சினிமா துறையில் நுழையும்போது, ஒரு நடிகர் அல்லது நடிகை வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் எத்தனை Brand-களில் அவர்களது முகம் இருக்கிறது என்பதுதான். அப்போது நிறைய மல்டி நேஷனல் Product-கள் என்னை அவர்களின் Brand ambassador-ஆக கேட்டபோது, நான் நல்ல புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஏற்று கொண்டேன்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடலில் சில பிரச்சனைகள் வந்ததிலிருந்து நான் அது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை. இப்போதெல்லாம் நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று மருத்துவர்களிடமாவது ஒப்புதல் வாங்குகிறேன். கடந்த வருடம் கூட நான் 15 பெரிய Brand-களுக்கு நோ கூறியிருக்கிறேன். கண்டிப்பாக அந்த விளம்பரங்களில் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் கொடுத்திருப்பார்கள்" என பேசியுள்ளார்.