விவாகரத்துக்கு பின் இப்படி மாறிவிட்டாரா சமந்தா? எது வந்தாலும் பாத்துக்கலாம்..
சமந்தா
நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனை மிக தீவிரமாக செய்து வருகிறார். மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கும் சமந்தா நடித்திருக்கும் இந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தற்போது சமந்தா அளித்து வரும் பேட்டிகளில் அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் அடிக்கடி பேசி வருகிறார்.

எது வந்தாலும் பாத்துக்கலாம்
சாகுந்தலம் படம் நடிக்க தொடங்கி இரண்டு வருடம் ஆகிறது, அனுபவம் எப்படி இருக்கிறது என ஒரு ரசிகர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு சமந்தா பதில் அளித்து இருக்கிறார்.
"அதிக விஷயங்கள் நடந்துவிட்டது. நான் கற்பனை கூட செய்யாத விஷயங்கள். என் வாழ்க்கைக்கு பெரிய பாடங்கள் இவை. எது வந்தாலும் பாத்துக்கலாம் என்கிற மனநிலை தற்போது எனக்கு வந்துவிட்டது" என சமந்தா கூறி இருக்கிறார்.
Gosh!!
— Samantha (@Samanthaprabhu2) April 9, 2023
So much has happened?
Unimaginable things.. life lessons..
I guess I am prepared for anything now☺️#Shaakuntalam https://t.co/t6qZQOheFt
மீண்டும் நடிக்க தொடங்கிய லெஜண்ட் சரவணன்.. ஜோடியாக இரண்டு நடிகைகள்