6 மாதம் படாத பாடுபட்ட நடிகை சமந்தா! சினிமாவில் இருந்து விலகும் முடிவில் உறுதி
சமந்தா
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு எக்கச்சக்க படங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் அவர் பிசியாக நடித்து வந்த நேரத்தில் தான் அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டே அவர் படங்களில் பணிகளை செய்து முடித்தார். அவர் பட ப்ரோமோஷனுக்கு கொடுத்த பேட்டியில் உடல்நிலை பற்றி கண்ணீர் விட்டது ரசிகர்களை கலக்கமடைய வைத்தது.
ஒருவழியாக சமந்தா தற்போது ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களின் வேலைகளை முடித்து கொடுத்து வருகிறார்.
6 மாதம் கஷ்டம்
'மிக நீளமான மற்றும் கடினமான 6 மாதங்கள்.. இறுதி வரை வந்துவிட்டேன்' என குறிப்பிட்டு தான் மோசமான உடல்நிலையால் படாத பாடு பட்டது பற்றி குறிப்பிட்டு இருக்கிறர் சமந்தா .
மேலும் இன்னும் மூன்று நாட்களில் கேரவன் வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டு இருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதை அவர் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் எப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
